தமிழ்நாட்டுக்கு குவாண்டம் கணினியியல் ஒதுக்குவதற்கு ஒன்றிய அரசை வலியுறுத்தி வருகிறோம் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

Published Date: January 9, 2024

CATEGORY: EVENTS & CONFERENCES

தமிழ்நாட்டுக்கு குவாண்டம் கணினியியல் ஒதுக்க ஒன்றிய அரசிடம் கோரிக்கை:

தமிழ்நாட்டுக்கு குவாண்டம் கணினியியல் ஒதுக்குவதற்கு ஒன்றிய அரசை வலியுறுத்தி வருகிறோம் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் வர்த்தக மையத்தின் உலக முதலீட்டாளர் மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஒரு பகுதியாக செயற்கை நுண்ணறிவு மற்றும் டீப் ஃபேக் தொடர்பான தலைப்பில் கருத்தரங்கள் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது:

செயற்கை நுண்ணறிவு மூலம் பல புதிய வேலைவாய்ப்புகளும் உருவாக்கும் அந்த சமயம் வேலை வாய்ப்புகளை அழிக்கும். டீப் ஃபேக் (deep fake) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தற்போது பல போலியான செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது. இது ஜனநாயகத்திற்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும். செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட சில கொள்கைகளை தமிழக அரசு கொண்டுவரும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்திய அரசு இரண்டு குவாண்டம் கணினியியல் மையங்களுக்கு நிதி உதவி அளிக்கிறது. வடகிழக்குக்கு ஏற்கனவே ஒன்று ஒதுக்கப்பட்டுள்ளது. மற்றொன்றை தமிழ்நாட்டுக்கு ஒதுக்குவதற்கு ஒன்றிய அரசை வலியுறுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

Media: Dinakaran